தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100 சதவீதம் தேர்ச்சி: தமிழாசிரியர்களுக்கு பாராட்டு

100 சதவீதம் தேர்ச்சி: தமிழாசிரியர்களுக்கு பாராட்டு

100 சதவீதம் தேர்ச்சி: தமிழாசிரியர்களுக்கு பாராட்டு


UPDATED : நவ 11, 2026 01:27 PM

ADDED : நவ 11, 2026 01:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 01:27 PM ADDED : நவ 11, 2026 01:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
'பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய தமிழாசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது,' என, தமிழக தமிழாசிரியர் கழக மாநில தலைவர் தெரிவித்தார்.

தமிழக தமிழாசிரியர் கழக மாநில தலைவர் சிவக்குமார் அறிக்கை:

தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில், 2025 - 2026ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய பட்டதாரி தமிழாசிரியர்கள், பிளஸ்2 வகுப்பு பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய முதுநிலை தமிழாசிரியர்கள் மற்றும், 10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய தமிழாசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தமிழக தமிழாசிரியர் கழகத்தின் இணையதளத்தில் தங்களது பெயர், பணிநிலை, பள்ளி முகவரி மற்றும் தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றை பதிவிட வேண்டும். மாவட்டந்தோறும் நடக்கும் விழாக்களில், சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் வாயிலாக சான்றிதழ்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, தேர்ச்சி சதவீதம் உயர்வதுடன், மாணவர்களுக்கு தமிழ்மொழி பற்று அதிகரிக்கும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us