UPDATED : நவ 11, 2026 01:28 PM
ADDED : நவ 11, 2026 01:29 PM
அ நிறம் | அளவு
வால்பாறை:
வால்பாறை திருஇருதய மெட்ரிக் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 63வது ஆண்டு விழா பள்ளி முதல்வர் ரூபினி தலைமையில் நடந்தது. விழாவில், பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அதனை தொடர்ந்து நடந்த விழாவில், பள்ளிகளின் தாளாளர் ரெஜினாமேரி, திருஇருதய ஆலய பங்குதந்தையர்கள் ஜார்ஜ் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். விழாவில், மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
