UPDATED : நவ 14, 2024 12:00 AM
ADDED : நவ 14, 2024 12:55 PM

பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் இல்லை என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய, 10,000 ஆசிரியர்களுக்கு பதில், வேறு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தர்மபுரி மாவட்டம், ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பாலாஜி, தனக்கு பதில் வேறொருவரை நியமித்தது கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோல், வேறு ஆசிரியர்கள் ஆள்மாறாட்டம் செய்தால், மாவட்டக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்ட, 6,035 ஆசிரியர்களைத் தவிர, வேறு யாராவது பள்ளிகளில் பணியாற்றினால், தகவல் அளிக்கும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டது.
இதுவரை எந்த அறிக்கையும் வராத நிலையில், 10,000 போலி ஆசிரியர்கள் உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.