UPDATED : மே 08, 2024 12:00 AM
ADDED : மே 08, 2024 05:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in/ www.dge.tn.gov.in/https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.