மாணவர்களுக்கான விசா கொள்கையில் மாற்றம் செய்த ஆஸி.,: இந்தியர்களுக்கு பாதிப்பு?
மாணவர்களுக்கான விசா கொள்கையில் மாற்றம் செய்த ஆஸி.,: இந்தியர்களுக்கு பாதிப்பு?
UPDATED : மே 08, 2024 12:00 AM
ADDED : மே 08, 2024 05:40 PM

மெல்போர்ன்:
மாணவர்களுக்கான விசா கொள்கையில் ஆஸ்திரேலிய அரசு மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.
ஆஸி.,யில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு விசா வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த விசா வழங்குவதற்கான நடைமுறைகளை ஆஸ்திரேலிய அரசு கடுமையாக்கி வருகிறது.
இந்நிலையில், மாணவர்கள் விசா பெறுவதற்கான விண்ணப்பம் பெறுவோர், வங்கி கணக்கில் வைக்க வேண்டிய சேமிப்பு தொகையை 21,041 ஆஸ்திரேலிய டாலரில் இருந்து 24,505 ஆஸ்திரேலிய டாலர் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை இந்திய மாணவர்களை பெரிதும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆஸி.,க்கு படிக்க அதிகம் வரும் வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர். 2023ம் ஆண்டில் ஜன.,- செப்., மாதம் வரை அங்கு படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1.23 லட்சம் ஆக இருந்தது.