தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்ச்சியும் எளிது; சென்டமும் எளிது பத்தாம் வகுப்பு மாணவர்களை குஷியாக்கிய ஆங்கிலம்

தேர்ச்சியும் எளிது; சென்டமும் எளிது பத்தாம் வகுப்பு மாணவர்களை குஷியாக்கிய ஆங்கிலம்

தேர்ச்சியும் எளிது; சென்டமும் எளிது பத்தாம் வகுப்பு மாணவர்களை குஷியாக்கிய ஆங்கிலம்


UPDATED : மார் 17, 2026 11:19 AM

ADDED : மார் 17, 2026 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2026 11:19 AM ADDED : மார் 17, 2026 11:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
'நன்றாக படிப்போர் சென்டம் பெறுவதும், சாதாரணமாக படிப்போர் எளிதில் தேர்ச்சி பெறும் வகையிலும் பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வு அமைந்தது' என மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் இத்தேர்வு எழுதியோர் கூறியதாவது:
எளிதோ எளிது
லவகிஷோர், முத்துத்தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருநகர்:

நன்றாக படிக்கும் மாணவர்கள் எளிதில் 'சென்டம்' எடுக்கும் வகையில் தேர்வு இருந்தது. எதிர்பார்த்த வினாக்களே கேட்கப்பட்டன. வினாத்தாளை பார்த்ததும் சந்தோஷமாக தேர்வை எழுதினோம். 'பாராகிராப்' வினா முதல் பாடத்தில் இருந்தே கேட்கப்பட்டது. இதை அனைத்து மாணவர்களும் படித்திருந்தனர்.

அதிக மதிப்பெண் உறுதி
காவியா, பராசக்தி மேல்நிலைப் பள்ளி, எஸ்.கோட்டைப்பட்டி:

செய்யுள் பகுதி 'பாராகிராப்' பகுதி எதிர்பார்க்காத வகையில் ஐந்து, ஏழாவது பாடங்களில் இருந்து கேட்கப்பட்டன. இதை சிலர் எழுதுவதில் சிரமம் இருந்தது. எட்டு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட கட்டுரைப் பகுதி வினா கொஞ்சம் கடினமாக இருந்தது. இருப்பினும் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி.

அதிக நேரடி வினாக்கள்
லக்சணா, புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளி, கருமாத்துார்:

ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் பகுதி வினாக்கள் அனைத்தும் அடிக்கடி கேட்டவை. இலக்கணப் பகுதி உட்பட அனைத்திலும் அதிக எண்ணிக்கையில் நேரடி வினாக்களே அதிகம் இடம் பெற்றன. மனப்பாடப் பகுதியும் எளிது. பல்வேறு திருப்புதல் தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்களே இந்த தேர்விலும் கேட்கப்பட்டிருந்தன.

முழு மதிப்பெண் அள்ளலாம்
பவேஸ், மாணவர், அரசு உயர்நிலைப் பள்ளி, விடத்தகுளம்:

துணைப்பாடம் பகுதியில் 'ஜிக்ஜாக்' என்ற இரண்டாவது பாடத்தில் இருந்தே கேட்கப்பட்டது. இதை அனைத்து மாணவர்களும் பல முறை எழுதிப்பார்த்தவை. இலக்கணப் பகுதியில் இடம் பெற்ற 8 மதிப்பெண் வினாக்களும் எளிமை. கடினமாக உணரவில்லை.

அதிக மாணவர் 'சென்டம்' பெறுவர்
லட்சுமி , ஆங்கில ஆசிரியை, அரசு மேல்நிலைப் பள்ளி டி.குன்னத்துார்:

ஒரு மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற 14 வினாக்களில் ஒன்று மட்டும் கடினமாக இருந்தது. 2 மதிப்பெண் பகுதி வினாக்களை எழுதுவதில் கிராமப்புற மாணவர்கள் சற்று சிரமப்பட்டனர். மனப்பாடப்பகுதி முதல் மூன்று பாடல்களை எதிர்பார்த்த நிலையில் 4வது பாடல் கேட்கப்பட்டதால் மாணவர்கள் சற்று திணறினர். 5 மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற நோட் மேக்கிங், விளம்பர பகுதி, கடிதம் எழுதுதல் அனைத்தும் எளிமை. நன்கு படிக்கும் மாணவர்கள் எளிதாக 'சென்டம்' பெறுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us