UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்டம் முழுதும், 104 மையங்களில் கடந்த மார்ச், 28ல் துவங்கியது. 29,899 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர். தமிழ், ஆங்கிலம், கணித தேர்வுகளை தொடர்ந்து, கடந்த, 11ம் தேதி அறிவியல் தேர்வு நடந்தது.
மொழிப்பாடங்கள் எளிதாக இருந்த நிலையில், கணிதம் கடினமாக இருந்ததால், மாணவ, மாணவியர் கவலை அடைந்தனர். கடந்த முறையை விட இந்தாண்டு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிமையாக அமைந்து விட்டதால், மகிழ்ச்சி அடைந்தனர். இன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. இன்றுடன் தேர்வு நிறைவு பெறுகிறது. வரும், 21ல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது.