UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 08:13 PM

கல்வி பெறும் நோக்கில் அமெரிக்காவிற்கு செல்லும் அயல்நாட்டு மாணவர்கள் குறித்த ஆய்வு அறிக்கையை 'இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன்' ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா செல்லும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2023-24ம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, 2022 -23ம் ஆண்டில் 10,57,188 ஆக இருந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2023-24ம் ஆண்டில் 11,26,690 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2022-23ம் ஆண்டில் 2,68,923 ஆக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 2023-24ம் ஆண்டில் 3,31,602 ஆக அதிகரித்து, 23.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், சீன மாணவர்களின் எண்ணிக்கை 2,89,526லிருந்து 2,77,398 ஆக குறைந்து 4.2 சதவீதமாக சரிந்துள்ளது.
அமெரிக்கா சென்ற வெளிநாட்டு மாணவர்களின் விபரம்:
இந்தியா - 3,31,602
சீனா - 2,77,398
தென்கொரியா - 43,149
கனடா - 28,998
தைவான் - 23,157
வியட்நாம் - 22,066
நைஜீரியா - 20,029
பங்களாதேஷ் - 17,099
பிரேசில் - 16,877
நேபாளம் - 16,742
சர்வதேச மாணவர்களின் விருப்பமான துறைகள்:
கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் - 2,80,922
இன்ஜினியரிங் - 2,10,163
பிசினஸ் அண்டு மேனேஜ்மெண்ட் - 1,59,810
பிசிக்கல் அண்டு லைப் சயின்சஸ் - 88,717
சோசியல் சயின்சஸ் - 84,307
பைன் அண்டு அப்ளைடு ஆர்ட்ஸ் - 54,159
ஹெல்த் புரொபஷன்ஸ் - 36,615
கம்யூனிகேஷன்ஸ் அண்டு ஜர்னலிசம் - 21,481
மற்ற துறைகள் - 1,90,516
பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை விபரம்:
நியுயார்க பல்கலைக்கழகம் - நியுயார்க் - 27,247
நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் - பாஸ்டன் - 21,023
கொலம்பியா பல்கலைக்கழகம் - நியுயார்க் - 20,321
அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம் - டெம்ப் - 18,430
யுனிவர்சிட்டி ஆப் சதர்ன் கலிபோர்னியா - லாஸ் ஏஞ்சல்ஸ் - 17,469
யுனிவரிசிட்டி ஆப் இல்லினோய்ஸ் - சாம்பெய்ன் - 15,376
பாஸ்டன் பல்கலைக்கழகம் - பாஸ்டன் - 12,853
கலிபோர்னியா பல்கலைக்கழகம் - பெர்க்லி - 12,441
மிச்சிகன் பல்கலைக்கழகம் - ஆன் ஆர்பர் - 11,766
வாஷிங்டன் பல்கலைக்கழகம் - சியாட்டல் - 10,720
கலிபோர்னியா பல்கலைக்கழகம் - லாஸ் ஏஞ்சல்ஸ் - 10,446
டெக்சாஸ் பல்கலைக்கழகம் - டல்லாஸ் - 10,491