தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/113 அரசு கல்லுாரிகளில் நுாலகர் பணியிடம் காலி

113 அரசு கல்லுாரிகளில் நுாலகர் பணியிடம் காலி

113 அரசு கல்லுாரிகளில் நுாலகர் பணியிடம் காலி


UPDATED : நவ 19, 2026 02:31 PM

ADDED : நவ 19, 2026 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 02:31 PM ADDED : நவ 19, 2026 02:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் பெருமளவில் காலியாக இருப்பதால், மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுத் திறனில் பின்தங்கும் நிலை தொடர்கிறது.

மாநிலத்தில், மொத்தம் 181 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் 113 கல்லுாரிகளில் நுாலகர் பணியிடங்களும், 97 கல்லுாரிகளில் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இக்கல்லுாரிகளில், பேராசிரியர்களுக்கு நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணிகளை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் கற்பித்தல், மதிப்பீடு, பிற திறன் மேம்பாடு பயிற்சி, ஆராய்ச்சிகளுக்கு நடுவில் இப்பணியை பெயரளவில் மட்டுமே செய்யும் நிலை உள்ளது.

பெரும்பாலான நேரங்களில் நுாலகங்களும், உடற்கல்வி இயக்குனர் அலுவலகமும் பூட்டப்பட்டு பயன்பாட் டில்லாமல் உள்ளன. மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள் உரிய பயிற்சி செய்ய முடியாத சூழல் உடற்கல்வி இயக்குனர் இல்லாததால் தொடர்கிறது.

பொறுப்பு வகிக்கும் பேராசிரியர்கள் போட்டிகளுக்கு மட்டும் அழைத்து செல்கின்றனர். ஆனால், பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு இல்லை.

இது குறித்து, அரசு கல்லுாரி ஆசிரியர் கழக பொது செயலாளர் சுரேஷ் கூறுகையில், “பல ஆண்டுகளாக நுாலகர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளன. இதனால், மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.விளையாட்டுக்கு என மாணவர்களிடம், 100 - 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இது தவிர எவ்வித நிதியும் அரசு தரப்பில் வழங்கப்படுவதில்லை. அரசு ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கைப்படி விளையாட்டுக்கு நிதி ஒதுக்கி ஊக்குவிக்கவேண்டும். காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,” என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us