புதுச்சேரியை சேர்ந்தவருக்கு 11வது முறையாக தேசிய விருது
புதுச்சேரியை சேர்ந்தவருக்கு 11வது முறையாக தேசிய விருது
UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM
ADDED : ஜூன் 18, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
புதுச்சேரியை சேர்ந்த ஆதவனுக்கு 11வது முறையாக தேசிய விருது வழங்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பான்பூர் கிருத்தி பாஷா பவனில் சர்வதேச கலை விழா ஜூன் 8ம் தேதி துவங்கியது. விழாவில், சர்வதேச அளவில் 26 நாடுகளை சேர்ந்த இளைஞர்கள், அவரவர் நாட்டின் மாநிலத்தின் கலாசார, நடன இசை பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில், பங்கேற்ற புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஆதவனுக்கு 11வது முறையாக தேசிய ஒருமைப்பாட்டு ஏக்தா விருது வழங்கப்பட்டது. ஏக்தா பரீஷத், ப்ராஜக்ட் பாயிண்ட் இணைந்து இந்த விருதினை வழங்கின.
இதன் மூலம் தேசிய அளவில் 11வது முறையாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆதவன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.