sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/12 ராக்கெட்கள் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

12 ராக்கெட்கள் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

12 ராக்கெட்கள் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்


UPDATED : ஜூலை 27, 2025 12:00 AM

ADDED : ஜூலை 27, 2025 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2025 12:00 AM ADDED : ஜூலை 27, 2025 09:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி:
இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 12 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர், திருச்சி விமான நிலையத்தில் அளித்த பேட்டி:


வரும் 30ம் தேதி, நாசாவும், இஸ்ரோவும் இணைந்து, சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் மேக மூட்டம், மழை போன்ற எந்த சூழலிலும் பூமியை படம் பிடிக்கும் திறன் கொண்டது. நிலநடுக்கம், பேரிடர் குறித்த தகவல்களை தரக்கூடிய செயற்கைக்கோளாகவும் உள்ளது. ஜி.எஸ்.எல்.வி., வரிசையில், 18வது ராக்கெட் இது.

இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 34 விதமான புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட செயற்கைக்கோள்களுடன், 12 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் இங்கிருந்து ஏவப்படுகிறது.

பிரதமர் ஒதுக்கீடு செய்த, 20,000 கோடி ரூபாயில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ககன்யான் திட்ட மூலம் இந்தியாவில் தயாரித்த ககன்யான் ஜி1 என்ற செயற்கைக்கோளில், ரோபோ வைத்து, இந்த ஆண்டு டிச., மாதம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிந்துார் ஆப்பரேஷனுக்கு பின், இந்திய மக்களின் பாதுகாப்பு தேவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். சிந்துார் ஆப்பரேஷனுக்கு நம்முடைய சேட்லைட் துல்லியமான தகவல்களை கொடுத்தது. விண்வெளி துறையில், இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us