sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 95.03 சதவீதம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 95.03 சதவீதம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 95.03 சதவீதம்


UPDATED : மே 08, 2025 12:00 AM

ADDED : மே 08, 2025 01:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2025 12:00 AM ADDED : மே 08, 2025 01:25 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடந்தன. மொத்தம், 8.21 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிட்டது. மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகளே அதிகம்!

* தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.70% பேரும், மாணவர்கள் 93.16% பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்


அரசுப் பள்ளிகள்- 91.94%
அரசு உதவிப்பெறும் பள்ளிகள்- 95.71%
தனியார் பள்ளிகள்-98.88%

டாப் 5 மாவட்டங்கள்


அரியலூர்-98.82%
ஈரோடு-97.98%
திருப்பூர்-97.53%
கோவை-97.48 %
கன்னியாகுமரி-97.01%

100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்!

தமிழ்- 135 பேர்,
இயற்பியல்- 1,125 பேர்,
வேதியியல்- 3,181 பேர்,
கணிதம்- 3,022 பேர்,
விலங்கியல்- 36 பேர்,
உயிரியல்- 827 பேர்,

மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, ஆன்லைன் வழியில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை, https://results.digilocker.gov.in மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் மொபைல் எண்ணிற்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us