12ம் வகுப்பு மாணவர்களுக்கு 16ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு 16ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு!
UPDATED : ஏப் 05, 2021 12:00 AM
ADDED : ஏப் 05, 2021 09:46 AM
அ நிறம் | அளவு
சட்டசபை தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களை தவிர அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது.
அதன்படி, தேர்தல் முடிவுக்கு பிறகு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. பொது தேர்வுக்கு முன்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதால் வரும் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை 12ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தொடர்ந்து 10 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. விடுமுறைக்கு பின்பே மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
