தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/12, 13ம் தேதிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

12, 13ம் தேதிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

12, 13ம் தேதிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்


UPDATED : பிப் 09, 2015 12:00 AM

ADDED : பிப் 09, 2015 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2015 12:00 AM ADDED : பிப் 09, 2015 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கோவை மற்றும் பொள்ளாச்சியில், வரும் 12, 13ம் தேதிகளில் நடக்கிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சர்வதேச திறனாளர் கண்டறியும் திட்டத்தில், 2014 - 2015ம் ஆண்டுக்கான, கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கோவை கல்வி மாவட்ட அளவில், வரும் 12ம் தேதி காலை 9:00 மணி முதல், நேரு விளையாட்டு அரங்கத்திலும், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில், 13ம் தேதி காலை 9:00 மணி முதல், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.

100, 200, 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படும் நிலையில், ஒருவர் அதிகபட்சம், ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, வகுப்பு வாரியாக தனித்தனியே போட்டிகள் நடக்கிறது.

ஆறாம் வகுப்பு மாணவ, மாணவியர், 2003 ஜனவரி முதல் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியர், 2002 ஜனவரி முதல் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர், 2001 ஜனவரி முதல் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வி மாவட்ட அளவில், முதல் இரண்டு இடங்களை பெறுவோர், மண்டல போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர்.

மண்டல அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுவோர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு அகாடமிகளில் சேர்க்கப்பட்டு, தகுதி வாய்ந்த பயிற்றுனர் மூலமாக, விளையாட்டுப் பயிற்சி வழங்கி, பல்வேறு உயர்நிலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர். போட்டிகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்த்தால் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் பள்ளி மற்றும் விடுதிகளில் சேர முன்னுரிமை வழங்கப்படும்.

மண்டல போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, அரசின் ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதிகளில் பள்ளிக் கல்வியுடன் முறையான விளையாட்டுப் பயிற்சி, உணவு மற்றும் விளையாட்டு சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது.

2014- 15ம் ஆண்டில், சர்வதேச திறனாளர் கண்டறியும் திட்டத்தில், 6, 7, 8ம் வகுப்புகளில் நடந்த உடற்திறன் தேர்வுகளில், 10 மதிப்பெண்கள் பெற்ற, மாணவ, மாணவியரை, இப்போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கலாம் என, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஸ்டான்லி மேத்யூ கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us