தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/140 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்

140 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்

140 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்


UPDATED : ஆக 12, 2014 12:00 AM

ADDED : ஆக 12, 2014 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2014 12:00 AM ADDED : ஆக 12, 2014 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்வழி இட ஒதுக்கீட்டில் தேர்வுபெற்ற 140 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில் வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய மூன்று பாடங்களை தமிழ் வழியில் படித்து போட்டி தேர்வை எழுதி, தேர்வு பெற்ற 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக பணி நியமனமின்றி தவித்து வந்தனர்.

இவர்கள், கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். ஒரு வாரத்திற்குள் 140 பேரும் பணி நியமனம் செய்யப்படுவர் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்நிலையில் 140 பேருக்கும் பணி நியமன உத்தரவுகள் அஞ்சல் மூலம் அனுப்பும் பணி துவங்கியதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. 15ம் தேதிக்குள் அனைவருக்கும் பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும் என கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us