UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 06:57 PM

சென்னை:
பள்ளி மாணவ - மாணவியர் பாட புத்தகங்களை எளிதாக படிக்கும் வகையில், நோட்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை, மதுரை, சிவகாசியை சேர்ந்த நிறுவனங்கள் பல பெயர்களில், நோட்ஸ்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றன.
நோட்ஸ்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும், கிரிமோ பேப்பர் கடந்தாண்டு டன், 74,000 ரூபாய்க்கு விற்றது. நடப்பாண்டில், 13,000 ரூபாய் சரிந்து, 61,000 ரூபாய்க்கு விற்கிறது.
அதுபோல, நோட்ஸ் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நுால், பசை உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் விலையில், கடந்த ஆண்டை விட, 10 முதல், 15 சதவீதம் வரை குறைப்பு செய்துள்ளன.
உதாரணமாக, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு நோட்ஸ், 180 முதல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 150 முதல், 170 ரூபாய் வரை விற்கிறது. நோட்ஸ்களின் விலையில் சரிவு ஏற்பட்டு இருப்பது, பெற்றோர், மாணவ - மாணவியர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது