தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1,525 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: 6,934 பேருக்கு அழைப்பு கடிதம்

1,525 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: 6,934 பேருக்கு அழைப்பு கடிதம்

1,525 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: 6,934 பேருக்கு அழைப்பு கடிதம்


UPDATED : அக் 11, 2009 12:00 AM

ADDED : அக் 11, 2009 08:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2009 12:00 AM ADDED : அக் 11, 2009 08:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் மாநில அளவிலான சீனியாரிட்டியின் அடிப்படையில் விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் மாவட்ட வாரியாக  சீனியாரிட்டி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1:5 என்ற வீதத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பபட உள்ளது.

இதில் தமிழ் பாடத்திற்கு 283, வரலாறு பாடத்திற்கு 35, புவியியல் 6, ஆங்கிலம் 475, கணக்கு 433, இயற்பியல் 156, வேதியியல் 84, தாவரவியல் 29, விலங்கியல் 32, தெலுங்கு பண்டிதர் 12 பணியிடங்கள் உட்பட மொத்தம் 1,545  பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக 6,934  பேருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பபடுகிறது.

விரைவில் இவர்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் சான்றிதழ்கள் சரி பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தகுதியானவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு பள்ளிகளில் காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us