ஞானமணி கல்வி நிறுவனங்களில் 15ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
ஞானமணி கல்வி நிறுவனங்களில் 15ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
UPDATED : ஏப் 15, 2026 07:19 PM
ADDED : ஏப் 15, 2026 07:20 PM
நாமகிரிப்பேட்டை:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஞானமணி கல்வி நிறுவனங்களில், பல்வேறு பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடந்தது.
ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் சஞ்சய்காந்தி, ஞானமணி கல்வியியல் கல்லூரி முதல்வர் வில்லவன் ஆகியோர் பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தனர்.
கல்வி நிறுவனங்களின் தாளாளர் மாலா லீனா, துணை தாளாளர் மதிவந்தனி அரங்கண்ணல், முதன்மை நிர்வாக அதிகாரி பிரேம்குமார், நிர்வாக இயக்குனர் மாதேஸ்வரன், கணினி அறிவியல் துறை தலைவர் செல்வராஜன், துணை முதல்வர் பாலகிருஷ்ணன், உமாமகேஷ்வரி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் ராமதாஸ் கலந்து கொண்டு, 896 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசினார். விழாவில், பல்வேறு துறைகளை சேர்ந்த, மொத்தம், 896 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர். இதில், 226 பேர் முதுகலை பட்டமும், 670 பேர் இளநிலை பட்டமும் பெற்றனர்.
