UPDATED : ஜன 14, 2024 12:00 AM
ADDED : ஜன 14, 2024 11:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழாவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.சென்னை மாநகரில் 18 இடங்களில், இன்று முதல் 17 ம் தேதி வரை, சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடக்க உள்ளது. தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை விழா நடக்கும்.விழாவில், செவ்வியல் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், காணா பாட்டு, கும்மியாட்டம், ஜிக்காட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்த விழாவில், சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழாவை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார். விழாவில், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.