UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 08:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு:
கர்நாடகாவில் தசராவை முன்னிட்டு, இன்று முதல் 17 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற மைசூரு தசரா வரும் 22ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது. கர்நாடகாவின் பிற மாவட்டங்களிலும் தசரா கொண்டாட்டங்கள் நடக்கும். ஆண்டுதோறும் தசராவை முன்னிட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டும் இன்று முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு, தனியார், சி.பி.எஸ்.சி., -- ஐ.சி.எஸ்.சி., - சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் மட்டும் சில சி.பி.எஸ்.சி., பள்ளிகள் அடுத்த மாதம் 3ம் தேதி திறக்கப்பட உள்ளன.