sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/18,000 மருத்துவர்களை ஜிப்மர் உருவாக்கியுள்ளது இயக்குனர் வீர்சிங் நேகி தகவல்

18,000 மருத்துவர்களை ஜிப்மர் உருவாக்கியுள்ளது இயக்குனர் வீர்சிங் நேகி தகவல்

18,000 மருத்துவர்களை ஜிப்மர் உருவாக்கியுள்ளது இயக்குனர் வீர்சிங் நேகி தகவல்


UPDATED : ஜன 21, 2026 04:57 PM

ADDED : ஜன 21, 2026 04:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2026 04:57 PM ADDED : ஜன 21, 2026 04:58 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களை ஜிப்மர் உருவாக்கியுள்ளது என, இயக்குனர் வீர்சிங் நேகி தெரிவித்தார்.

ஜிப்மரில் 14வது பட்டமளிப்பு விழாவில் ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகி வரவேற்று, பேசியதாவது: மருத்துவக் கல்வி, நோயாளி பராமரிப்பு, ஆராய்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் சமூகப் பங்களிப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஜிப்மர் முன்னேற்றமடைந்துள்ளது.

என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை 2025ல் மருத்துவப் பிரிவில் 4வது இடத்தையும், இந்தியா டுடே தரவரிசை 2025ல் எம்.பி.பி.எஸ்., பாடநெறி வழங்கும் மருத்துவ நிறுவனங்களில் 2வது இடத்தையும் ஜிப்மர் பெற்றுள்ளது.

எப்.ஐ.சி.சி.ஐ., ஹெல்த் கேரின் சிறந்த விருதை பெற்றுள்ளது. தென் இந்தியா மற்றும் பிற மாநிலங்களுக்கு முக்கிய உயர்நிலை மருத்துவ பரிந்துரை மையமாக ஜிப்மர் இருக்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநோயாளிகள், பல்லாயிரக்கணக்கான உள்நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம், மேம்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை வசதிகள், ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு இலவசம் மற்றும் குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் வழங்குகிறது.

மேலும், சேதராப்பட்டு, புதுச்சேரியில் ஒரு விபத்து மற்றும் புனர்வாழ்வு மையம் மற்றும் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் போன்ற முக்கிய திட்டங்கள் துவங்கப்படும். இது தென் இந்தியா முழுதும் உள்ள ஏழை மக்களுக்கு உயர் தர சிகிச்சை வழங்கும் வகையில் இருக்கும். காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய இடங்களில் உள்ள ஜிப்மர் மையங்கள் விரிவாக செயல்படுகிறது. ஜிப்மர் 18,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களை உருவாக்கியுள்ளது. 218 ஆராய்ச்சி திட்டங்கள் ரூ.119 கோடி நிதியுடன், தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us