தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/19ல் வேலைவாய்ப்பு முகாம் பணி நாடுனர்களுக்கு அழைப்பு

19ல் வேலைவாய்ப்பு முகாம் பணி நாடுனர்களுக்கு அழைப்பு

19ல் வேலைவாய்ப்பு முகாம் பணி நாடுனர்களுக்கு அழைப்பு


UPDATED : ஜூன் 14, 2026 11:34 AM

ADDED : ஜூன் 14, 2026 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 11:34 AM ADDED : ஜூன் 14, 2026 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
'வரும், 19ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:


தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும், 'தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்', நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடக்கிறது.

அதன்படி, வரும், 19 காலை, 10:30 மணிக்கு, வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கணினியியல் (ஜாவா, டேலி) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும், ஆலோசனையும் வழங்கப்படும். விபரங்களுக்கு, 04286 - 222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us