கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு 1,981 பேர் ஆப்சென்ட்
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு 1,981 பேர் ஆப்சென்ட்
UPDATED : ஜூன் 22, 2026 06:26 PM
ADDED : ஜூன் 22, 2026 06:27 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 1,981 பேர் இளநிலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' மறுதேர்வை எழுதவில்லை.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புக்கு, 2026 - 2027ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மே, 3ம் தேதி நடந்தது. அதில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததால், தேர்வை ரத்து செய்து, மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், 'நீட்' மறுதேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 11 மையங்களில் நேற்று 'நீட்' தேர்வு நடந்தது. தேர்-வெழுத விண்ணப்பித்த, 4,697 பேரில், 3,588 பேர் தேர்வு எழுதினர். அதில், 1,109 பேர் தேர்வு எழுதவில்லை.
தீவிர பரிசோதனைகள் செய்த பின் காலை, 11:30 மணி முதல் தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம், 01:30 மணிக்கு, தேர்வு மையங்களின் கதவுகள் பூட்டப்பட்டு, 02:00 மணிக்கு, தேர்வர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. மாலை, 5:00 மணிக்கு தேர்வு முடிந்தது.
தர்மபுரி மாவட்டத்தில், மொத்தம், 9 மையங்களில் நேற்று, 'நீட்' தேர்வு நடந்தது. விண்ணப்பித்த, 4,453 மாணவ, மாணவியரில், 3,581 பேர் தேர்வு எழுதினர். இதில், 872 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர். தர்மபுரி அரசு கல்லூரி மையத்திற்கு, 5 நிமிடம் தாமதமாக வந்த ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவனுக்கு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த மே, 3ம் தேதி நடந்த, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்த, 4,409 மாணவர்களில், 143 பேர் மட்டும் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், நேற்று நடந்த தேர்வில், 872 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆனது குறிப்பிடத்தக்கது.
