தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை 19வது பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை 19வது பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை 19வது பட்டமளிப்பு விழா


UPDATED : ஜூலை 09, 2026 05:30 PM

ADDED : ஜூலை 09, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 05:30 PM ADDED : ஜூலை 09, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையின், 19வது பட்டமளிப்பு விழா, விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லுாரியில் உள்ள அன்னபூர்ணா கலையரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. நிகர்நிலை பல்கலை வேந்தர் கணேசன் தலைமை வகித்தார்.

நிறுவன அறக்கட்டளை அறங்காவலர் அன்னபூரணி, நிறுவன தலைவர் சரவணன், பல்கலை துணைத்தலைவர்கள் சந்திர சேகர், அனுராதா, இயக்குனர்கள் காமாட்சி, அருணாதேவி, ராமசாமி, ஜெகநாதன், நிர்வாக துணைத்தலைவர் கோகுல் கிருஷ்ணன், நிர்வாக இயக்குனர்கள் வசுந்தரா, கணேசன், ஆவர்த்தினி, பிற முக்கிய உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து வேந்தர் கணேசன், முறைப்படி தொடங்கிவைத்து, மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள், பட்டங்களை வழங்கினார். அதில் அனைத்து துறைகளிலும், 4,656 மாணவ, மாணவியர், அந்தந்த துறைகளில் பட்டங்களை பெற்றனர். அவர்களில், 122 தங்க பதக்கம், 110 பேருக்கு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
வெள்ளி, வெண்கல பதக்கங்கள், இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு, சிறந்த கல்வி செயல்திறனுக்காக வழங்கப்பட்டன. முன்னதாக துணைவேந்தர் சுதிர், ஆண்டறிக்கை மூலம் பல்கலை சாதனைகளை எடுத்துரைத்தார்.
பல்கலை இணை துணை வேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன், இயக்குனர்கள், அலுவலர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பட்டதாரிகள், அவரது பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us