2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி வழங்க உத்தரவு
2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி வழங்க உத்தரவு
UPDATED : அக் 30, 2014 12:00 AM
ADDED : அக் 30, 2014 03:57 PM
திருவள்ளூர்: ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சேமநல நிதி நிலுவை தொகையை, இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என, ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருவள்ளுர் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. ஆட்சியர் வீரராகவ ராவ், தலைமை வகித்து பேசுகையில், ”ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேமநல நிதி நிலுவை தொகையை, இரண்டு மாதத்தில் முடித்து வழங்க வேண்டும். அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுடைய கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்,” என்றார்.
கூட்டத்தில் 34 மனுக்கள் வரப்பெற்று, அதில் ஐந்து இனங்களுக்கு உடன் தீர்வு காணப்பட்டு முடிக்கப்பட்டது, பிற மனுக்களை, விரைவில் முடிக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இயக்குநர் மனோகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) விமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத் தலைவர் சந்திரன் நன்றி கூறினார்.

