தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2ம் நாள் வணிகவியல் தட்டச்சு தேர்வு

2ம் நாள் வணிகவியல் தட்டச்சு தேர்வு

2ம் நாள் வணிகவியல் தட்டச்சு தேர்வு


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால், தட்டச்சு தேர்வுகள், ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை நடத்தப்படுகிறது.இதன்படி நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி மற்றும் ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லுாரியில், தட்டச்சு தமிழ், ஆங்கில இளநிலை, முதுநிலை தேர்வுகள் தொடங்கின. இதில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், 1,095 பேரும், ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லுாரியில், 905 பேரும் பங்கேற்றனர்.நேற்று, 2ம் நாளாக நடந்த தேர்வில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், 919 பேர் பங்கேற்றனர். ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லுாரியில், 900ம் பேர் பங்கேற்றனர். தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் தட்டச்சு தேர்வை முதன்மை கண்காணிப்பாளரான, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜேந்திரன், உதவி கண்காணிப்பாளரான, கடத்துார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் லஷ்சுமிபதி ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. மேலும், தேர்வு பணியில் கூடுதல் கண்காணிப்பாளர்களாக, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி தமிழ்துறை பேராசிரியர் சிவபிரகாஷம், பைசுஹள்ளி பாலிடெக்னிக் பேராசிரியர் பெரியசாமி உட்பட, 24 பேர் பங்கேற்றனர்.* ஆக., 2023ம் ஆண்டிற்கான வணிகவியல் தட்டச்சு தேர்வு கடந்த, 2 நாட்களாக கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. நேற்று முன்தினம் இளநிலை மாணவ, மாணவியர், 498 பேருக்கும், முதுநிலை மாணவ, மாணவியர், 241 பேருக்கும் தேர்வுகள் நடந்தன. நேற்று, இளநிலை தேர்வை, 302 பேரும், முதுநிலை தேர்வை, 224 பேரும், முன் இளநிலை தேர்வை, 13 பேரும் என மொத்தம், 1,278 மாணவ, மாணவியர் தட்டச்சு தேர்வை எழுதினர்.தேர்வு ஏற்பாடுகளை, முதன்மை கண்காணிப்பாளர் சுப்பையா மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் ரத்னா தேவி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். தேர்வை பறக்கும் படை தலைவர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us