தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அக்னிவீர் திட்டத்தில் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை முடிவு

அக்னிவீர் திட்டத்தில் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை முடிவு

அக்னிவீர் திட்டத்தில் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை முடிவு


UPDATED : நவ 05, 2026 05:00 PM

ADDED : நவ 05, 2026 05:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 05:00 PM ADDED : நவ 05, 2026 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராணுவம், விமானப்படை மற்றும் கடற்பனை என முப்படைகளில் இளைஞர்களை குறுகிய காலத்தில் பணியில் சேர்க்கும் திட்டம் அக்னிவீர் திட்டம் ஆகும். 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு 4 ஆண்டுகள் பணிக்காலம் என வரையறுக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பணிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு, 6 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக முப்படை தலைமை தளபதி ராஜா சுப்ரமணி அறிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு பணியில் சேர்ந்த 18,300க்கும் அதிகமான அக்னிவீரர்களின் பணிக்காலம், டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போதைய மத்திய அமைச்சரவையின் முடிவு படி, அவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தற்போதுள்ள புள்ளி விவரங்களின்படி, ராணுவத்தில் 2,70,000 அக்னி வீரர்களும், இந்திய விமானப்படையில் 27,000 பேரும், கடற்படையில் 21,000 பேரும் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us