மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரயில்வே வாரிய தேர்வுக்கு பதிவு செய்யலாம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரயில்வே வாரிய தேர்வுக்கு பதிவு செய்யலாம்
UPDATED : நவ 04, 2026 03:39 AM
ADDED : நவ 04, 2026 03:39 PM
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் பிரசன்னா ராமசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் வெண்ணைமலை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, ரயில்வே தேர்வு வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு விபரம் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, சேர விரும்பும் போட்டி தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார்அட்டை நகலுடன் வரும், 16ம் தேதி அன்று நேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வு, வாராந்திர தேர்வு, இணையவழி தேர்வு, முழு மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 04324-223555, 63830 50010, 63743 19939 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
