தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘20 சதவீத நீர் பயன்பாட்டை குறைத்தால் அணைக்கு அவசியம் இல்லை’

‘20 சதவீத நீர் பயன்பாட்டை குறைத்தால் அணைக்கு அவசியம் இல்லை’

‘20 சதவீத நீர் பயன்பாட்டை குறைத்தால் அணைக்கு அவசியம் இல்லை’


UPDATED : டிச 02, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
“விவசாயத்தில் 20 சதவீத நீர் பயன்பாட்டை குறைத்தால், நாட்டில் கூடுதலாக அணை கட்ட வேண்டிய அவசியம் இருக்காது,” என, உலக நிதி அமைப்பின் கொள்கை ஆலோசகர் பிக்சம் குஜ்ஜா பேசினார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், ‘இந்தியாவில் செம்மை நெல் சாகுபடி முறை, அதை மேம்படுத்தும் கொள்கை மற்றும் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் டிச. முதல் தேதி துவங்கியது.
இதில், உலக நிதி அமைப்பின் கொள்கை ஆலோசகர் பிக்சம் குஜ்ஜா பேசியதாவது:
செம்மை சாகுபடி முறையில் கோதுமை, ராகி, கடுகு, துவரம்பருப்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.  செம்மை நெல் சாகுபடி திட்டம் பற்றிய பயிற்சி, தேசிய அளவில் 220 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தமிழகத்தில் 30 சதவீதம், திரிபுராவில் 20 சதவீதம் அளவுக்கு விவசாயிகளைச் சென்றடைந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் செம்மை நெல் சாகுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி வலியுறுத்தி வருகிறோம்.
வரும் 2015ம் ஆண்டுக்குள், இந்தியா முழுவதும் 20 சதவீத நிலப்பரப்பில் செம்மை நெல் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கும்படி அரசை வலியுறுத்துவோம்.
இம்முறையில் பயிரிடுவதற்கு, மிகக்குறைந்த அளவே நெல் விதை தேவைப்படும். இவை முற்றிலும் நடைமுறைக்கு வந்தால், விதை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பாதிப்பு இருக்கவே செய்யும்.
தேசிய அளவில் செம்மை சாகுபடி முறை, நெல் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இந்தியாவில் விவசாயத்துக்கு 70 சதவீதம் அளவுக்கு நீர் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக நெல் பயிருக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.
செம்மை சாகுபடி முறை,  நீர் பயன்பாட்டை வெகுவாக குறைத்துள்ளது. தேசிய அளவில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நீரின் அளவை 20 சதவீதம் குறைத்தால், கூடுதலாக அணை கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. அதோடு, தண்ணீருக்கான பிரச்னையும் ஏற்படாது. இவ்வாறு பிக்சம் குஜ்ஜா பேசினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை துணைவேந்தர் ராமசாமி பேசியதாவது:
இந்தியாவில் செம்மை சாகுபடி முறை 25 சதவீத பாசனப்பகுதியில் பயன்படுத்தினால், அரிசி உற்பத்தி இரண்டு கோடி டன்னாக உயரும். அதே நேரத்தில் நீர் பயன்பாடு 25 சதவீதம் குறையும்.
தமிழகத்தில் விவசாய வேலையாட்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. இதனால், விவசாயத்தில் நவீன கருவிகள் புகுத்தப்பட்டுள்ளன. இவை தொழிலாளர் பற்றாக்குறையை போக்குவதுடன், செலவையும் வெகுவாக குறைக்கின்றன. இவ்வாறு துணைவேந்தர் ராமசாமி பேசினார்.
அமெரிக்காவின் கார்னல் பல்கலை பேராசிரியர் நார்மன் உப்ஹாப், கருத்தரங்க மலரை வெளியிட்டார்.
பெண் விவசாயின் ஆவேசம்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் நடந்த கருத்தரங்கில் பெண் விவசாயி மனோன்மணி பேசியதாவது:
செம்மை நெல் சாகுபடி முறை கடந்த 2003ல், கிள்ளிகுளம் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கூடுதலாக விளைச்சல் பெற்று வருகிறோம். வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகளை ஊக்கப்படுத்தி, புதிய தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும்.
விளைநிலங்களில் களையெடுக்க கருவி பொருத்தப்பட்ட களையெடுக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள், விவசாயிகளை முறையாகச் சென்று சேரவில்லை. இதற்கு வேளாண் துறையில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையே காரணம்.
விவசாய விளைபொருட்கள் உற்பத்தி குறைந்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோம் என்கின்றனர் அதிகாரிகள். அந்த நாட்டிலும் விவசாயிகள் தான் விளைபொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு உழைப்பு மட்டுமே மூலதனம். விவசாயி வேலையில் ஈடுபடாமல் இருந்தால், இந்த உலகமே பட்டினியால் செத்து விடும். இவ்வாறு மனோன்மணி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us