UPDATED : டிச 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: ஐ.ஏ.எஸ்., சவால் நிறைந்த பணி என அரசு கேபிள் ‘டிவி’ கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனர் சி. உமாசங்கர் பேசினார்.
யு.ஜி.சி.,சார்பில் எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் சிறுபான்மை மாணவியருக்கான இந்திய ஆட்சிப் பணியியல் தேர்வுக்கான பயிற்சி முகாம் துவக்க விழா மதுரை பாத்திமா கல்லூரியில் நடந்தது. முதல்வர் பாத்திமா தலைமை வகித்தார். செயலாளர் எஸ்தர்மேரி முன்னிலை வகித்தார்.
விழாவில் உமாசங்கர் பேசுகையில், “ஐ.ஏ.எஸ்.,ஒரு சவால் நிறைந்த பணி. இத்தேர்வுக்கு அன்றாட உலக நிகழ்வுகள், பொருளாதாரம், அரசியல் அறிவு முக்கியம். எந்த பாடத்தில் நம்மால் அதிக ஆர்வம், மதிப்பெண் பெறலாம் என முடிவு செய்ய வேண்டும். பாடங்களை தேர்வு செய்தல், தகவல் தொடர்புத்திறன் மிக முக்கியம். வரலாறு, சமூக அறிவியல், அரசியல் அறிவியலை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்யலாம்” என்றார்.
