அரசு மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
அரசு மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
UPDATED : டிச 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆசிரியர்கள், ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில், மருத்துவம் சாராத ஆசிரியர்கள் (எம்.எஸ்சி., அனாட்டமி, பிசியாலஜி), கடந்த ஆறு மாதத்துக்கு முன் தற்காலிக பணியில் அமர்த்தப்பட்டனர். இதைக் கண்டித்து அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை டிச. 1ம் தேதி நடத்தினர்.
அரசு மருத்துவக்கல்லூரி ஆசிரியர்கள் கூறியதாவது:
மருத்துவம் சாராத ஆசிரியர்களை பணிக்கு நியமித்துள்ளதால், கல்வித்தரம் பாதிக்கப்படும். அந்த ஆசிரியர்களை, கலைக்கல்லூரிகளுக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும். மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புக்களை டாக்டர்கள் மட்டுமே நடத்த வேண்டும்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 200 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், இவர்கள் வகுப்புக்கு செல்ல மாட்டர். இதனால், மருத்துவம் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
