20 கல்வி நிறுவனங்களுடன் சிறப்புடன் செயல்பட்டு வரும் நந்தா நிறுவனங்கள்
20 கல்வி நிறுவனங்களுடன் சிறப்புடன் செயல்பட்டு வரும் நந்தா நிறுவனங்கள்
UPDATED : ஏப் 30, 2026 05:11 PM
ADDED : ஏப் 30, 2026 05:13 PM
ஈரோடு:
கொங்கு மண்டல வரலாற்றில், கலங்கரை விளக்கமாக நந்தா கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் கீழ், 1992ம் ஆண்டு ஈரோடு நகரில் வாடகை கட்டடத்தில் பி. பார்ம் கல்லுாரி முதலாவதாக தொடங்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு பின், கூரப்பாளையம் கிராமத்தை ஒட்டிய கோவை - ஈரோடு பிரதான சாலையின் அருகில் புதிய கட்டிடத்தில், 60 மாணவர்களுடன் துங்கியது.
ஈரோடு மாவட்டத்தில், தனியார் மருத்துவக் கல்லுாரி இல்லை என்ற குறையை கடந்த, 2023ம் ஆண்டு நந்தா கல்வி அறக்கட்டளை தீர்த்தது. இங்கு அனுபவமிக்க மருத்துவர்களை கொண்ட, 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு, வெளி மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, ரத்த பரிசோதனை நிலையம், இசிஜி, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், டயாலிசிஸ், சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் தடையில்லா பிராண வாயு கொண்ட படுக்கைகள் போன்ற எண்ணற்ற வசதிகள் நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்தினை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.
கல்வி பணியில் 60 மாணவர்களுடன் தொடங்கிய நந்தா, தற்போது 20 கல்வி நிறுவனங்களுடன் 16 ஆயிரம் மாணவர்கள், 1,500 பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டு பறந்து விரிந்துள்ளது.
இதற்கு ஆணிவேராக திகழ்ந்து வரும், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் கூறுகையில், “கால் நுாற்றாண்டிற்கும் மேலாக கிராமப்புற மாணவ, மாணவிகளின் கனவினை நனவாக்குவதற்காக, இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்பதனை மையமாக கொண்டு, திறமையான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி மற்றும் அதனுடன் கூடிய பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம்,” என்றார்.

