தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2015-16ம் ஆண்டில் 10,000க்கும் மேற்பட்ட பலவிதமான பணிகளுக்கு தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.

2015-16ம் ஆண்டில் 10,000க்கும் மேற்பட்ட பலவிதமான பணிகளுக்கு தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.

2015-16ம் ஆண்டில் 10,000க்கும் மேற்பட்ட பலவிதமான பணிகளுக்கு தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.


UPDATED : ஜன 31, 2015 12:00 AM

ADDED : ஜன 31, 2015 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2015 12:00 AM ADDED : ஜன 31, 2015 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போட்டித் தேர்வு

தமிழக அரசு துறைகளில் காலியாகும் குரூப் - 1, 2, 2 ஏ, 4, வி.ஏ.ஓ., மற்றும் இதர துறை பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை, தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் வெளியிட, செயலர் விஜயகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அப்போது, தேர்வாணைய தலைவர் கூறியதாவது: கடந்த 2014 - 15ல், வி.ஏ.ஓ., குரூப் - 2 மற்றும் 2 ஏ, புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, 14,252 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டான, 2015 - 16ல், குரூப் - 1, 2, 2 ஏ, 4, வி.ஏ.ஓ., மாவட்ட கல்வி அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், அறநிலையத் துறை செயல் அதிகாரி, உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இதில், வி.ஏ.ஓ., உட்பட, சில தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் வரவில்லை. இருப்பினும், அனைத்து பதவிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்திற்கும் குறையாமல், காலிப் பணியிடங்கள் வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே நடந்த குரூப் - 1, முதல்நிலை, குரூப் - 2, தேர்வு முடிவுகள் குறுகிய காலத்தில் வெளியிடப்படும். தேர்வு முறையில் மாற்றம் ஏதும் இல்லை.

குழப்பங்கள்

ஆன்லைன் பதிவில் உள்ள குழப்பங்கள், அவ்வப்போது சரி செய்யப்படுகின்றன. குரூப் - 1 தேர்வு தொடர்பான, சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தல்படி, அதற்கான பணிகள் நடக்கின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, இந்தாண்டு தேர்வு மற்றும் முடிவுகள் அறிவிப்பு, 19 பணி நிலைகளுக்கு நடக்கிறது. 26 பணி நிலைகளுக்கு, இந்த ஆண்டு அறிவிப்பு வெளியாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us