2025 தேசிய விளையாட்டு விருதுகள் - விண்ணப்பிக்க அழைப்பு
2025 தேசிய விளையாட்டு விருதுகள் - விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : செப் 30, 2025 04:45 PM
ADDED : செப் 30, 2025 04:47 PM
சென்னை:
நாட்டின் விளையாட்டில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கி வருகிறது.
இதில், விளையாட்டுகளில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது, தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு அர்ஜூனா விருது, வாழ்நாள் பங்களிப்பை செய்தவர்களுக்கு அர்ஜூனா விருது (வாழ்நாள்) வழங்கப்படுகின்றன. சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருது அளிக்கப்படுகிறது. விளையாட்டு மேம்பாட்டில் பங்கு வகிக்கும் நிறுவனங்களுக்கு தேசிய விளையாட்டு மேம்பாட்டு விருது வழங்கப்படுகிறது.
2025-ம் ஆண்டிற்கான விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு அமைச்சகத்தின் [www.yas.nic.in](http://www.yas.nic.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே ஏற்கப்படுகின்றன. [www.dbtyas-sports.gov.in](http://www.dbtyas-sports.gov.in) என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 28 (செவ்வாய்க்கிழமை) என அறிவிக்கப்பட்டுள்ளது.