UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 01:20 PM
கடந்த ஓராண்டாக தலைமை பொறுப்பை வகிக்கும் இந்தியா, பல்வேறு துறை சார்ந்த 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை கடந்த ஓராண்டில் நாடு முழுதும் நடத்தி முடித்துள்ளது. ஜி - 20 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழு இந்த கூட்டங்களில் பங்கேற்றன. இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரபேியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள், ஜி-20 அமைப்பில் இடம் பெற்றுள்ளன.ஜி21 ஆனது ஜி20
இந்நிலையில் ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்ரிக்க யூனியன் இணைந்தது. நிரந்தர உறுப்பு நாடானதை அடுத்து ஆப்ரிக்க ஒன்றிய தலைவர் ஜி 20 மாநாட்டில் உள்ள நிரந்தர உறுப்பினர் இருக்கையில் அமர்ந்தார். ஆப்ரிக்க யூனியன் இணைந்ததால் ஜி 20 அமைப்பின் பெயர் இனி ஜி 21 என அழைக்கப்படும். 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஜி 20 என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஜி 21 என அழைக்கப்படும்.
