UPDATED : ஆக 28, 2025 12:00 AM
ADDED : ஆக 28, 2025 08:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை சார்பில், தேசிய ஆசிரியர் விருது 2025-க்கு 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் இருந்து, பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, கணிதம், இயல் அறிவியல், உயிரி அறிவியல், வேதி அறிவியல், மருத்துவம், மருந்தியல், கலை, சமூக அறிவியல், மொழியியல், சட்டம், வணிகவியல், மேலாண்மை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கர் ஸ்ரீராம் சங்கரன், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் சிவ சத்தியா ஆகியோர் இந்த ஆண்டு தேசிய ஆசிரியர் விருதைப் பெற உள்ளனர்.