தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஸ்பயர் விருது திட்டத்துக்கு 2,336 மாணவ, மாணவியர் தேர்வு

இன்ஸ்பயர் விருது திட்டத்துக்கு 2,336 மாணவ, மாணவியர் தேர்வு

இன்ஸ்பயர் விருது திட்டத்துக்கு 2,336 மாணவ, மாணவியர் தேர்வு


UPDATED : மார் 04, 2026 10:04 PM

ADDED : மார் 04, 2026 10:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2026 10:04 PM ADDED : மார் 04, 2026 10:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'இன்ஸ்பயர்' விருது திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதில், நாடு முழுதும், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியரில், ஒரு லட்சம் பேருக்கு தலா, 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

அதன் வாயிலாக, அறிவியல் கண்டுபிடிப்புகளை, மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடக்கும் கண்காட்சியில் காட்சிப்படுத்தலாம். முதன்மை இடம் பிடிப்பவர்களுக்கு விருது, பரிசு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பங்கேற்க, அறிவியல் கண்டுபிடிப்பு யோசனைகளுடன், பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்டது.

அதில் தமிழகத்தில் இருந்து, 2,336 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், சேலம் மாவட்டத்தில், 89 பேர் இடம்பெற்றுள்ளதும் அடங்கும். தேர்வு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தலா, 10,000 ரூபாய் ஊக்கத்தொகை, நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us