தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு மையம் துவக்கம்

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு மையம் துவக்கம்

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு மையம் துவக்கம்


UPDATED : மார் 04, 2026 10:07 PM

ADDED : மார் 04, 2026 10:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2026 10:07 PM ADDED : மார் 04, 2026 10:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கான, சிறப்பு சிகிச்சை மையத்தை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.

சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 9 கோடி ரூபாய் மதிப்பில், விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை துறையில், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார்.
அதன்பின் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் விளையாட்டுத்துறை, மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு மையம் துவக்கப்பட்டு உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில், இந்த வசதிகள் இருந்தாலும், மாநில அரசு மருத்துவமனைகளில், விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை மையம், முதல் முறையாக திறக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம், 34.60 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்பட்டது.

கருவுற்ற ஓரிரு வாரங்களில், மரபணு தன்மையை கண்டறியும் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலான சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை, இந்த மருத்துவமனை பெற்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us