தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/24 பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம்: உயர்கல்வித்துறை

24 பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம்: உயர்கல்வித்துறை

24 பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம்: உயர்கல்வித்துறை


UPDATED : மார் 12, 2026 03:10 PM

ADDED : மார் 12, 2026 03:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2026 03:10 PM ADDED : மார் 12, 2026 03:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
வேலை வாய்ப்பில், 24 பட்டப்படிப்புகளுக்கு இணை அங்கீகாரம் வழங்கி, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின், 'இணை தன்மைக்குழு' கூட்டம், கடந்த 3ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அரசு வேலை வாய்ப்பில், பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இணை தன்மை வழங்கி, உயர்கல்வித் துறை அரசாணை பிறப்பித்து உள்ளது.

அதன்படி, அண்ணா பல்கலையின் பி.இ., பிரின்டிங் மற்றும் பேக்கேஜிங் டெக்னாலஜி ஆகியவை, வேலைவாய்ப்பில், பி.இ., பிரின்டிங் டெக்னாலஜி படிப்புக்கு சமம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வழங்கும், பி.சி.ஏ., படிப்பு, பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு சமம்.

பாரதிதாசன் பல்கலை வழங்கும், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.எஸ்.சி., உயிர் அறிவியல் பட்டப்படிப்பு, எம்.எஸ்.சி., தாவரவியல் படிப்புக்கு சமம். பாரதிதாசன் பல்கலை வழங்கும் பி.காம்., வரி நடைமுறை மற்றும் பயிற்சி பட்டப்படிப்பு, வேலை வாய்ப்பில் பி.காம்., பட்டப்படிப்புக்கு சமம்.

இவை உட்பட மொத்தம் 24 பட்டப்படிப்புகளுக்கு, வேலை வாய்ப்பில் இணை அங்கீகாரம் வழங்கி, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதற்கான அரசாணையை, உயர்கல்வித் துறை செயலர் சங்கர் வெளியிட்டுள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us