UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 11:08 AM

ஓமலுார்:
ஓமலுார் வட்டார அளவில் கல்வி கடன் மேளா, கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள பத்மவாணி கல்லுாரியில் நடந்தது.
அதில், 9 வங்கிகள், 70 மாணவ, மாணவியரிடம் மனுக்களை பெற்று அதற்கான பணியை தொடங்கினர். முகாமை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில், 7,000 மாணவ, மாணவியருக்கு, 99 கோடி ரூபாய், கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்-ளது. காடையாம்பட்டி வட்டாரத்தில் நடந்த முகாமில், 212, மகுடஞ்சாவடியில், 251 என, 463 மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், 29 பேருக்கு உடனே, 95.70 லட்சம் ரூபாய் கல்விக்கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதி விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேச்சேரி வட்டாரத்தில் உள்ள மாணவ, மாணவியர் பயன்பெற, வரும், 24ல் கைலாஷ் மகளிர் கல்லுாரியில் கல்வி கடன் மேளா நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.