பட்டாபிராம் டைடல் பார்க் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
பட்டாபிராம் டைடல் பார்க் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 11:07 AM

ஆவடி:
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், உங்களை தேடி; உங்கள் ஊரில் திட்ட முகாம் துவங்கியது.
இரண்டாம் நாளான நேற்று, ஆவடி பருத்திப்பட்டில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நடைபெறும் பணிகள். பட்டாபிராம், தண்டரை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பட்டாபிராம், சி.டி.எச்., சாலையில், 10 ஏக்கரில், 5.57 லட்சம் சதுர அடியில், 235 கோடி மதிப்பில், 21 மாடிகளுடன் கட்டப்படும், டைடல் பார்க் பணிகளை ஆய்வு செய்தார்.
கடந்த 2020ல் துவங்கப்பட்ட இந்த பணிகள், நீண்ட காலமாக நடந்து வருகிறது. எனவே, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.