UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 11:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்:
புளிச்சப்பள்ளம் தேசிய சீடு அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பில், ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற புதுச்சேரி சார் பதிவாளர் கிருஷ்ணானந்தம், ராஜி, மக்கள் சமூக பொருளாதார மேம்பாட்டு சங்க தலைவர் ராமச்சந்திரன், தேசிய சீடு அறக்கட்டளை இயக்குனர் பூங்குழலி, மேலாண்மை இயக்குனர் நாராயணன் ஆகியோர் பங்கேற்று, ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.