தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/25ம் தேதி கல்விக்கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

25ம் தேதி கல்விக்கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

25ம் தேதி கல்விக்கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : நவ 13, 2026 01:45 PM

ADDED : நவ 13, 2026 01:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 01:45 PM ADDED : நவ 13, 2026 01:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம், வரும் 25ம் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

அன்றைய தினம், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும் முகாமில், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோரின் புகைப்படங்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல், வருமானச் சான்று, ஜாதிச் சான்று, ஆதார், பான் கார்டு, கல்விச் சான்றிதழ்கள், கட்டண விவரம் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை 0421-2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us