தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/25 ஆண்டுக்கு பின் என்.ஐ.டி., மாணவர் சந்திப்பு

25 ஆண்டுக்கு பின் என்.ஐ.டி., மாணவர் சந்திப்பு

25 ஆண்டுக்கு பின் என்.ஐ.டி., மாணவர் சந்திப்பு


UPDATED : டிச 25, 2010 12:00 AM

ADDED : டிச 25, 2010 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2010 12:00 AM ADDED : டிச 25, 2010 02:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித்திரிந்த பறவைகளே... பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்' என்று சோகத்துடன் பிரிந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களை மட்டுமே கண்கூடாக பார்க்க முடிகிறது.


சோகத்துடன் பிரிந்த சம்பவத்தை விடுத்து, மகிழ்ச்சியுடன் மாணவர்கள் கூடி கலக்கும் நிகழ்வுகள் மிகச்சிலவே. அதில் ஒன்றாக, திருச்சி ஆர்.இ.சி.,யில் (தற்போது என்.ஐ.டி) 1981-85ம் ஆண்டு படித்த மாணவர் ஒன்று கூடிய சம்பவம் நேற்று திருச்சியில் நடந்தேறியது. கால் நூற்றாண்டுக்கு பிறகு, கல்லூரி நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டலில் அரங்கேறியது.


அப்போதைய ஆர்.இ.சி.,, முதல்வர் முதல்வராக இருந்த பி.எஸ். மணிசுந்தரம் பேசியபோது, ""25 ஆண்டுக்கு முன் கல்லூரியில் படித்த என் மாணவர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாணவர் அனைவரும் சமுதாயத்துக்கு சேவை செய்யவேண்டும்,'' என்றார்.



தற்போதைய என்.ஐ.டி., இயக்குனர் சிவன் பேசியபோது, ""முன்னாள் மாணவர்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் மிகச்சிறந்த கல்வி நிறுவனமாக திருச்சி என்.ஐ.டி., விளங்குகிறது,'' என்றார்.



முன்னதாக, முன்னாள் மாணவர் கார்த்திகேயன் வரவேற்றார். முன்னாள் பேராசிரியர்கள் எம்.சண்முகம், வெங்கட் ரமணி, கே.பி., மொஹைதீன், ஆர்க்கிடெக் சண்முகம், ஆர்க்கிடெக் ரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, எல்.ஆதிமூலம், கார்த்திகேயன், சுரேஷ், பாஸ்கர், முத்துரத்தினம் செய்திருந்தனர்.



கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள் மாணவர் குடும்பத்துடன் பங்கேற்றனர். என்.ஐ.டி., மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்று மவுனமாக துவங்கிய சந்திப்பு வைபவம், நேரம் போக, போக மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us