UPDATED : அக் 31, 2015 12:00 AM
ADDED : அக் 31, 2015 11:16 AM
காஞ்சிபுரம்
: காஞ்சிபுரம்
நகராட்சியில் உள்ள, 25 பள்ளிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 1.83 கோடி ரூபாயை, நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்து
உள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சியில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, 39 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், 26 பள்ளிகளில், சிறு மின்விசைப் பம்புடன் கூடிய தண்ணீர் தொட்டி, சுற்றுச்சுவர், புனரமைப்பு உள்ளிட்டவற்றிற்காக, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.
அதன்படி,
நேற்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், இந்த பணிகளை மேற்கொள்ள, 26 பள்ளிகளில்,
25 பள்ளிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.
அதற்காக, 1.83 கோடி ரூபாயை நகராட்சி நிர்வாகம்
ஒதுக்கியுள்ளது.
மேலும், 38வது வார்டில் உள்ள, யாகசாலை நடுநிலைப் பள்ளியில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஒரே ஒரு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டதால், மறு ஒப்பந்தப்புள்ளி கோர, நகர்மன்றம் முடிவு செய்துள்ளது.
