sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

2500 சீட் காலி! : எம்.சி.ஏ., வகுப்பில் சேர மாணவர்கள் தயக்கம்

/

2500 சீட் காலி! : எம்.சி.ஏ., வகுப்பில் சேர மாணவர்கள் தயக்கம்

2500 சீட் காலி! : எம்.சி.ஏ., வகுப்பில் சேர மாணவர்கள் தயக்கம்

2500 சீட் காலி! : எம்.சி.ஏ., வகுப்பில் சேர மாணவர்கள் தயக்கம்


UPDATED : ஆக 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்த இடங்களை கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ளும், அதே நேரத்தில் எம்.பி.ஏ., பாடத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.


தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செசயல்படும் அரசு, அரசு உதவி பெறும் இன்ஜி., கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செசயல்படும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 270 கல்லூரிகளில் அரசு ஒதுக் கீட்டுக்கான எம்.சி.ஏ., சீட்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 966; எம்.பி.ஏ., சீட்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 779.


தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) எழுதிய மாணவ, மாணவிகள், பொது கவுன்சிலிங் மூலம் அரசு ஒதுக் கீட்டுக்கான இடங்களில் தேர்வு செய்யப்படுகின்றனர். அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.சி.ஏ., எம்.பி.ஏ., சீட்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.,) நடந்தது. எம்.சி.ஏ., கவுன்சிலிங்கில் பங்கேற்க 11,923 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


இந்த மாணவர்களுக்கு இரு கட்டமாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள எட்டாயிரத்து 966 இடங்களில், ஆறாயிரத்து 430 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இன்னும் இரண்டாயிரத்து 536 இடங்கள் காலியாகவுள்ளன. முக்கிய கல்லூரிகளில் மட்டும் எம்.சி.ஏ., சீட்கள் நிரம்பியுள்ள நிலையில், பிரபலமடையாத பல கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.சி.ஏ., இடங்கள் காற்று வாங்குகின்றன. இந்த காலியிடங்களை, கல்லூரி நிர்வாகம் நிரப்பவுள்ளன. இதற்கு லட்கணக்கில் வசூலிக்கக்கூடும். இதை உயர்கல்வித்துறை கண்காணிப்பது அவசியம்.


அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.பி.ஏ., சீட்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க 15 ஆயிரத்து 31 மாணவ, மாணவிகள் விண்ணப் பித்தனர். இவர்களுக்கு இரண்டு கட்ட கவுன்சிலிங் நடத்தியாகிவிட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள ஏழாயிரத்து 779 இடங்களில் ஆறாயிரத்து 844 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 935 இடங்கள் காலியாகவுள்ளன.


டான்செட் தேர்வில் 64.6 மதிப்பெண் முதல் 0 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள், எம்.பி.ஏ., கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். மீதியுள்ள 935 இடங்களை நிரப்ப, டான்செசட் தேர்வில் மைனஸ் 1 மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைப்பது பற்றி, இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

கவுன்சிலிங் துவங்கும் முன், புதிதாக அங்கீகாரம் பெற்ற கலை அறிவியல் மற்றும் இன்ஜி., கல்லூரிகளில் துவக்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு மாணவர்களிடையே மவுசு இல்லை. பெயர் பெற்ற, வேலைவாய்ப்பு உடனுக்குடன் பெற்றுத் தரக்கூடிய கல்லூரிகளில் சேரவே மாணவர்கள் விரும்புகின்றனர்.


இதனால், புதிதாக துவங்கிய கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சீட்கள் காலியாகவே இருக்கின்றன. அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களும் காலியாகவே இருப்பதால், அந்த காலியிடத்தை கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால், அந்த கல்லூரி நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்தி, மாணவர்கள் படிக்க வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த ஆண்டு எம்.பி.ஏ., படிப்புக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பான்மையான சீட்கள் நிரப்பப்பட்டுள்ளன. எம்.சி.ஏ.,வுக்கு மாணவர்கள் மத்தியில் போதிய அளவுக்கு வரவேற்பு இல்லாதது தான் இந்த நிலைமைக்கு காரணம் என்கிறது உயர்கல்வித் துறை வட்டாரம்.






      Dinamalar
      Follow us