sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

2500 ஆண்டு கற்கால நினைவுச் சின்னங்கள் வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு

/

2500 ஆண்டு கற்கால நினைவுச் சின்னங்கள் வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு

2500 ஆண்டு கற்கால நினைவுச் சின்னங்கள் வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு

2500 ஆண்டு கற்கால நினைவுச் சின்னங்கள் வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு


UPDATED : ஜன 14, 2024 12:00 AM

ADDED : ஜன 14, 2024 11:16 AM

Google News

UPDATED : ஜன 14, 2024 12:00 AM ADDED : ஜன 14, 2024 11:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு:
வருஷநாடு தங்கம்மாள்புரம் அருகே வாய்க்கால்பாறையில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அப்பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் கொடுத்த தகவலில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், வரலாற்று ஆசிரியர் மணிகண்டன், மாணவர்கள் பிரகாஷ், சிவனேஸ்வரன் ஆய்வு செய்தனர். 40 ஏக்கரில் பெருங்கற்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் கூறியதாவது:
இறந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கால ஓட்டத்திற்கு ஏற்ப சில மாறுதல்கள் ஏற்படுகின்றன. கன்னியாகுமரி முதல் தருமபுரி மாவட்டம் வரை இப்பண்பாடு பரவி உள்ளது. பெருங்கற்கால மக்கள், இறந்த தங்களது முன்னோர்களுக்கு பெரியகல் பலகைகள்,கற்களைக் கொண்டும் தாழிகள், ஈம தொட்டிகளை சதுரம், செவ்வகமாகவும் கல்லறைகளை கட்டி அவற்றின் உள்ளே இறந்தவர் உடலை அல்லது எலும்புகளை வைத்து அடக்கம் செய்து இறந்த பின்னும் அவர்கள் வாழ்வதாக கருதி வந்தனர். அவற்றை வழிபாடு செய்யும் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். பெரிய கற்களை கொண்டு நினைவுச் சின்னங்கள் எழுப்பியதால் இக்காலத்தை பெருங்கற்காலம் என வகைப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us