UPDATED : மார் 02, 2026 08:13 PM
ADDED : மார் 02, 2026 08:17 PM
கள்ளக்குறிச்சி:
ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 25வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜி, துணைத் தலைவர்கள் ரவிசங்கர், கல்லுாரி ஆளுநர் மதிவாணன் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக பதிவாளர் சிங்காரவேலு பங்கேற்று, 601 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, கடந்த 28 ஆண்டுகளாக சிறந்த முறையில் கல்வி சேவையாற்றும் கல்லுாரி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, பட்டம் பெற்ற மாணவர்கள் சமூகத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்ற மாணவர், பல்கலைகழக தரவரிசையில் இடம் பெற்ற மாணவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கல்வி நிறுவன இயக்குநர்கள் துரைசாமி, செல்லப்பன், எலிசபெத்ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ஜான்விக்டர், புல முதல்வர் அசோக், துறைத்தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

