தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலத்தேர்வில் 267 ஆப்சென்ட்

ஆங்கிலத்தேர்வில் 267 ஆப்சென்ட்

ஆங்கிலத்தேர்வில் 267 ஆப்சென்ட்


UPDATED : மார் 06, 2026 01:40 PM

ADDED : மார் 06, 2026 01:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2026 01:40 PM ADDED : மார் 06, 2026 01:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆங்கிலத் தேர்வில் 267 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

2025 - 26ம்ஆண்டிற்கான பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 26 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 218 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 99 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். 9 ஆயிரத்து 855 மாணவர்கள், 11 ஆயிரத்து 715 மாணவிகள் என 21ஆயிரத்து 570 பள்ளி மாணவர்களில் 267 பேர் ஆப்சென்ட் ஆகினர். விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 45 மையங்கள், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 54 மையங்கள் என 99 மையங்களில் தேர்வு நடந்தது.

மாவட்டத்தில் 5 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 21 வழித்தட அலுவலர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தேர்வு நடக்கும் அனைத்து தேர்வு மையங்களில் 103 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், 1235 அறைக் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us