UPDATED : மார் 06, 2026 01:37 PM
ADDED : மார் 06, 2026 01:40 PM
உடுமலை:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், இன்று (6ம் தேதி) நடைபெற உள்ளது.
இம்முகாம், கலெக்டர் அலுவலக வளாக நான்காவது தளத்திலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், காலை, 10:00 முதல் மதியம், 02:00 மணி வரை முகாம் நடைபெறும்.
முகாமில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனத்தினர் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தேர்வு செய்யப்படும் வேலை தேடுவோருக்கு, முகாமிலேயே பணி நியமன கடிதம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க வருவோர், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை மற்றும் பயோடேட்டா விவரங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
வேலை அளிக்கும் நிறுவனத்தினரும், வேலை தேடுவோரும், https://www.tnprivatejobs.tn.gov.in என்கிற தளத்தில் வருகையை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

